ஸ்காட்லாந்து ஒற்றுமையாக இருக்க முடிவெடுத்திருப்பது இந்தியாவுக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது. உதாரணமாக, நம் இந்தியாவுக்குள் பல்வேறு மாநிலங்களை கொண்டுள்ளோம். ஆனால், அனைவரும் ஒற்றுமையாக ஒரே நாடாக வாழ்கிறோம். பிரிந்து கிடக்கும் பல துணை தேசியவாதங்கள் ஒன்றிணைந்து ஒரே தேசியமாக காட்சியளிக்கிறது. எனக்கு தோன்றுவது இதுதான். ஒற்றுமை இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று.
ஜனநாயக முறையில் ஸ்காட்லாந்து மக்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தாலும் அவர்கள் ஒற்றுமையை தேர்ந்தெடுத்து உலகிற்கு ஒரு நல்ல ஆரோக்கியமான அறிகுறியை தெரிவித்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.இந்திய-பிரிட்டிஷ் ஹெரிடேஜ் டிரஸ்ட் சார்பில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க விவாதம் ஒன்றில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ள சசி தரூர் அங்கிருந்து இந்த பேட்டியை அளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி