செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மொபைல் வங்கி சேவையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு முதலிடம்!…

மொபைல் வங்கி சேவையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு முதலிடம்!…

மொபைல் வங்கி சேவையில் பாரத ஸ்டேட் வங்கிக்கு முதலிடம்!… post thumbnail image
மும்பை:-வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு காசோலை கலெக்சன், இருப்பு போன்ற விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சிறு தொகையின் வரவு-செலவு விபரங்கள் கூட உடனடியாக வாடிக்கையாளருக்கு தெரிகின்றது. இந்த மொபைல் வங்கி சேவை, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புள்ளி விபரங்களில் பாரத ஸ்டேட் வங்கி 1.15 கோடி வாடிக்கையாளர்களுக்கு மொபைல் வங்கி சேவையை வழங்கி முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மொத்த சில்லறை வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 4.5 சதவீதத்தினருக்கு பாரத ஸ்டேட் வங்கி இந்த சேவையை வழங்கிவருகிறது. இச்சேவையில் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத மார்க்கெட் ஷேருடன் தொடர்ந்து ஸ்டேட் வங்கி முன்னணியில் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி