செய்திகள்,திரையுலகம் கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற நடிகர் அமீர்கானுக்கு எதிர்ப்பு!…

கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற நடிகர் அமீர்கானுக்கு எதிர்ப்பு!…

கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற நடிகர் அமீர்கானுக்கு எதிர்ப்பு!… post thumbnail image
மும்பை:-நடிகர் அமீர்கான் தற்போது பி.கே.என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். ராஜ்குமார் ஹிஜானி இயக்குகிறார். இப்படத்துக்காக அமீர்கான் நிர்வாண போஸ் கொடுத்து இருந்தார். இந்த போஸ்டர்கள் மும்பை நகரமெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தது. கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அமீர் கான் கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்று இன்னொரு சிக்கலில் மாட்டி உள்ளார்.

பி.கே. படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. அங்குள்ள கோவிலில் படப்பிடிப்பு நடத்தினர். அப்போது கோவிலுக்குள் அமீர்கானும் படக்குழுவினரும் சென்றார்கள். அமீர்கான் தவிர எல்லோரும் செருப்பை கழற்றி வைத்து விட்டு கோவிலுக்குள் போனார்கள். செருப்புடன் வந்த அமீர்கானை பார்த்த பக்தர்கள் ஆத்திரம் அடைந்தனர். எதிர்ப்பும் தெரிவித்தனர். அமீர்கானுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி