சென்னை:-இந்த தீபாவளிக்கு ஐ, கத்தி என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் திரைக்கு வரயிருக்கிறது.சில நாட்களுக்கு முன் ஐ படத்தின் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளிவந்து ஐடியுனில் முதலிடம் பிடித்தது. தற்போது கத்தி திரைப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான சில மணி நேரங்களிலேயே, பலர் பயன்படுத்து ஐடியூன்ஸ் இணையதளத்தில், இப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து ஐ பாடலை பின்னுக்கு தள்ளியது.
இதற்கு முன்பு அனிருத் இசையமைத்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான் கரத்தே, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களும் ஐடியுனில் இடம்பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி