ஆனபோதும் இன்னமும் வாலு படப்பிடிப்பு முடியவில்லை. இதையடுத்து, வாலு படத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஹன்சிகா.இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், வாலு படத்துக்காக இதுவரை 80 நாட்களுக்கு மேல் கால்சீட் கொடுத்துள்ளேன். ஆனால் இன்னமும் படத்தை முடிக்கவில்லை. அதோடு, கடைசியாக ஒரு பாடல் காட்சியை படமாக்க 3 நாட்கள் கேட்டனர். அவர்கள் கேட்ட தேதியில் எனக்கு வேறு பட வேலைகள் இருந்தும்கூட, அவர்கள் கேட்ட தேதியை ஒதுக்கிக்கொடுத்தேன்.
ஆனால், குறித்த நாளில் படப்பிடிப்பு நடத்தாமல் ரத்து செய்து விட்டனர். இதனால் நான் கொடுத்த 3 நாட்கள் கால்சீட்டும் வீணாகி விட்டது. இப்படி பலமுறை அவர்கள் என் கால்சீட்டை வீணடித்து உள்ளனர். அதனால் இனிமேல் வாலு படத்தில் நடிக்க கால்சீட் கேட்டால் நான் கொடுப்பதாக இல்லை என்று கோபத்துடன் கூறுகிறார் ஹன்சிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி