இந்த விசயத்தில் தமன்னா ஓரளவு விட்டுக்கொடுத்து செல்வார். அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்தபோதுகூட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றுதான் ஓடோடி வந்து கமிட்டானார். ஆனால் இப்போது அவரும் அந்த முதல் ரகத்தில் சேர்ந்து விட்டார். இந்தியில் தான் நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் படங்கள் தோல்வியடைந்தபோது அடக்கி வாசித்து வந்தவர், கடைசியாக அக்சய்குமாருடன் நடித்த எண்டர்டெயின்மென்ட் படம் ஹிட்டடித்த பிறகுதான் இப்படி சம்பள விசயத்தில் கறாராகி விட்டார்.
லிங்குசாமியின் இயக்கத்தில் பையா படத்தில் நடித்த அவர், அதையடுத்து லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கயிருந்த ரஜினி முருகன் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் முதலில் சம்மதம் சொல்லியிருந்த தமன்னா, இப்போது முன்பு வாங்கியதை விட டபுள் மடங்கு சம்பளம கேட்கிறாராம். இதனால் அப்படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி