நிகழ்ச்சியில் 11 ஆணழகன்கள் மேடையில் தோன்றி இசைக்கேற்ப தங்கள் உடல் வலிமையை காட்டினார்கள். அதை பார்த்து ரசித்த அர்னால்டு எழுந்து நின்று கைதட்டினார். ஆணழகன்களுடனும் கைக்குலுக்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-ஆணழகன்களின் நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தேன். அவர்கள் தங்கள் உடற்கட்டை நன்றாக வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களை போல் ஆணழகனாக இருந்து கதாநாயகனா உயர்ந்தவன். இன்று நான் வந்தது ஐ பட விழாவில் கலந்துகொள்வதற்காக மட்டும் அல்ல.
டைரக்டர் ஷங்கர் உங்களிடம் நான் வேலைகேட்டு வந்ததாக நினைத்துக்கொள்ளுங்கள். என்னை வைத்து நீங்கள் எப்போது படம் எடுக்க போகிறீர்கள்.நான் ஷங்கர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். கெனன் தி கிங் என்ற படத்தை என்னை வைத்து எடுக்க தயாரா…சென்னை மிக அழகான நகரம். இதற்கு முன்பு நான் இந்தியாவுக்கு ஏற்கனவே வந்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் முதன்முறையாக சென்னைக்கு வந்திருக்கிறேன்.சென்னை நகர மக்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது. அதனால் மீண்டும் நான் சென்னைக்கு வருவேன்.இவ்வாறு அர்னால்டு பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி