செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!…

ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!…

ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!… post thumbnail image
புதுடெல்லி:-டிராவல்கானா.காம் என்ற இணையதளத்தின் சார்பில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் டெக்ஸ்ட்வெப் என்ற ஆப் ஸ்டோருடன் இணைந்துள்ளது. மொபைல் போன் உபயோகப்படுத்துபவர்கள் ஆப் ஸ்டோரில் டெக்ஸ்ட்வெப் ஆப் பயன்பாட்டை டவுன்லோடு செய்து நிறுவிய பின் 51115 என்ற எண்ணுக்கு டிராவல்கானா என டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டும்.

அதன் பின் உங்கள் மொபைலுக்கு வரும் எஸ்.எம்.எஸ். தகவல் உங்கள் பி.என்.ஆர் நம்பரை கேட்கும். நீங்கள் உங்கள் பி.என்.ஆர். நம்பரை டைப் செய்து அனுப்பிய பின் அடுத்த ரெயில் நிலையத்திலேயே உங்கள் இருக்கைக்கே சூடான, சுவையான உணவு வந்து சேரும். உணவை பெற்றுக்கொண்ட பின் நீங்கள் பணம் செலுத்தினால் போதும். இதற்காக பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள உணவகங்களுடன் டிராவல்கானா இணையதளம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

எளிய வழியில் தரமான உணவு வழங்க தாங்கள் முடிவு செய்துள்ளதாக டிராவல்கானாவின் தலைமை செயல் அதிகாரியான புஷ்பிந்தர் சிங் கூறினார். டெக்ஸ்ட்வெப்பின் மேலாண்மை இயக்குனரான மணிஷ் மகேஸ்வரி கூறுகையில், இனி ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ரெயிலில் உள்ள உணவகத்துக்கே செல்ல தேவையில்லை. உணவகத்தில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் அவர்கள் இருக்கைக்கே வந்து சேரும் வகையில் எங்கள் செயல்பாடு அமையும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி