சென்னை:-நடிகை சமந்தா நடித்த அஞ்சான் படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தீபாவளிக்கு விஜய் ஜோடியாக நடித்த கத்தி படம் வருகிறது. மேலும் இரு தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.
சமந்தாவிடம் மூக்கில் அறுவை சிகிச்சை செய்தால் அழகு மேலும் கூடும் என்று நெருக்கமானவர்கள் யோசனை சொன்னார்கள். இதையடுத்து சில மாதங்களுக்கு முன் லண்டன் சென்று முதல் கட்ட அறுவை சிகிச்சை பெற்று திரும்பினார். சிகிச்சைக்கு பிறகு முன்பை விட அழகாக தெரிந்தார்.
டாக்டர்கள் ஆலோசனைப்படி இறுதியாக இன்னொரு முறை மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த அறுவை சிகிச்சை மூக்கை இன்னும் அழகாக்குமாம்.இதற்காக விரைவில் சமந்தா லண்டன் செல்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி