செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!…

குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!…

குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!… post thumbnail image
புதுடெல்லி:-2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மனோஜ் குமாரின் பெயரை அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யாமல், இளம் வீரர் ஜெய் பகவான் பெயரை தேர்வுக்குழுவினர் பரிந்துரை செய்திருந்தனர்.இதுபற்றி கேட்டபோது, தேர்வு நடைமுறையில் தவறு நடந்துவிட்டதாக கூறினர். இருப்பினும், மனோஜ் குமாரின் பெயர் விருதுப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இதனால் கடும் அதிருப்தியடைந்த மனோஜ் குமார், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையின்போது விளையாட்டு அமைச்சகம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் சிங் ஆஜரானார். ஊக்க மருந்து வழக்கில் சிக்கியதாக தவறாக நினைத்து அவரது பெயரை தேர்வுக்குழு ஆரம்பத்தில் பரிசீலிக்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றிய தகவல் மனோஜ் குமாருக்கு இன்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விஷயத்திற்காக நான் நீதிமன்றத்தை அணுகியது அவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. ஆனால், வேறு வழியில்லாமல் சென்றேன். எனது, கோரிக்கை சரி என்று நிரூபித்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இது, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான எனது மன உறுதியை மேலும் அதிகரிக்கும். எனக்காக தனியாக நின்று போராடிய என் சகோதரர் ராஜேஷூக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்றார் மனோஜ் குமார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி