செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இந்தியா, சீனா இணைந்து தயாரிக்கும் படத்தில் இணையும் ஜாக்கிசான், அமிதாப் பச்சன்!…

இந்தியா, சீனா இணைந்து தயாரிக்கும் படத்தில் இணையும் ஜாக்கிசான், அமிதாப் பச்சன்!…

இந்தியா, சீனா இணைந்து தயாரிக்கும் படத்தில் இணையும் ஜாக்கிசான், அமிதாப் பச்சன்!… post thumbnail image
மும்பை:-இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை இரு நாட்டு அரசாங்கமும் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய, சீன நட்சத்திரங்கள் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார்கள்.இதில், இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், சீனாவைச் சேர்ந்தவருமான ஜாக்கி சானும் இணைந்து நடிக்கிறார்கள்.

படத்தின் பெயர் கோல்ட் ஸ்ட்ரக். இதில் ஹாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ். அபே தியோல் நடிக்கிறார்கள். மற்ற டெக்னீஷயன்கள் தேர்வு நடந்து வருகிறது. இன்றைய காலச்சூழலில் நடக்கும் அட்வென்ஜகர் கதை கொண்ட படம். இந்தியா மற்றும் சீனாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்தியாவின் கலாச்சாரமும், சீனாவின் கலாச்சாரமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அதற்கேற்ப கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படம் தொடர்பான முதல்கட்ட பேச்சு வார்த்தைளை இந்திய, சீனா அதிகாரிகள் தொடங்கியிருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி