இயக்குனர் ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் ஐ. ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக விக்ரம் தனது உடலை மிகவும் ஒல்லியாக மாற்றியும், பின்னர் திடகாத்திரமாகவும் மாற்றி நடித்திருக்கிறார்.எமி ஜாக்சன் விக்ரம் ஜோடியாக நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பு முழுவதுமாக நடந்து முடிந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால்தான் வெளியீடு தாமதமடைகிறதாம். அவையனைத்தும் முடிந்த பின் படத்தை தீபாவளி அன்று வெளியாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி