சென்னை:-தமிழ் சினிமாவில் சில பிரிக்க முடியாத ஜோடிகள் இருப்பார்கள். அதில் குறிப்பாக இந்த இயக்குனருக்கு இவர் தான் ஏற்ற இசையமைப்பாளர் என்று கூறுவார்கள்.அந்த வகையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் செல்வராகவன் –யுவன் கூட்டணி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளது.
ஆனால், இருவரும் சில வருடங்கள் பிரிந்து விட்டனர். தற்போது மீண்டும் அனைவரும் எதிர்பார்த்தது போல் செல்வாவின் பழைய கூட்டணியான யுவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் அடுத்த படத்தில் இணையவுள்ளனர்.இதை செல்வராகவன் மனைவி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி