‘ஆரோகணம்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். தற்போது ‘நெருங்கிவா முத்தமிடாதே’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை என்ற டி.வி. நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இதில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து பேட்டி எடுத்து ஒளிபரப்பி வருகிறார்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்மஆசாமி கொலை மிரட்டல் விடுத்துள்ளான். டி.வி. நிகழ்ச்சியில் சர்ச்சையான விஷயங்களை அவர் அலசுவதால் மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க அவரது கணவர் ராமகிருஷ்ணன் நேற்று கமிஷனர் அலுவலகம் வந்து இருந்தார். கமிஷனரை சந்திக்க முடியவில்லை. இன்று நேரில் புகார் அளிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி