சாம்பியன்ஸ் ‘லீக்’ போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:–ஐ.பி.எல். தொடரில் பிராவோ காயத்தால் விலகினார். இதனால் அணிக்கு பாதிப்பு இருந்தது. தற்போது அவர் அணிக்கு திரும்பி இருப்பது பலமாகும். எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஐ.பி.எல். தொடரில் 2 மாதங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டது இந்தப் போட்டியில் பலனை தரும்.
சாம்பியன்ஸ் ‘லீக்’ கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இங்குள்ள மைதான சூழ்நிலையை கருத்தில் கொண்டால் ஐ.பி.எல். அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.ஆனாலும் 20 ஓவர் போட்டி லாட்டரி போன்றது. குறிப்பிட்ட நாளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தனிநபர் ஒருவரால் ஆட்டத்தின் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்க முடியும்.இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி