சென்னை:-விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அவரை நடிகர் சூர்யா நேற்று சந்தித்து பேசினார். இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர் நீண்ட நேரம் பேசிவிட்டு சூர்யா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி