மும்பை:-கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகை ரேகா ஆகியோருக்கு டெல்லி மேல்–சபை நியமன எம்.பி. பதவியை கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியது. தெண்டுல்கர், ரேகாவை போல டெல்லி மேல்–சபை நியமன எம்.பி. பதவியை விரும்புகிறீர்களா… என்று பாலிவுட் நடிகர் அமீர்கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நியமன எம்.பி. பதவி கிடைத்தால் அதை ஏற்பது பற்றி பரிசீலிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமீர்கான் கூறியதாவது:–
தெண்டுல்கரும், ரேகாவும் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நான் கருத்து தெரிவிக்க இயலாது. அவர்கள் எனது நண்பர்கள் ஆவார்கள். ஆனால் இது மாதிரி நியமன எம்.பி. பதவி வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதை ஏற்பது பற்றி பரிசீலிப்பேன்.சமூகத்துக்கு எனது பங்களிப்பை வெளிப்படுத்த முடியும். அதில் சிறப்பாக இருக்கவும் செய்யலாம். இல்லாமலும் போகலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி