அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்:ஜனாதிபதி பேச்சு!…

இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்:ஜனாதிபதி பேச்சு!…

இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்:ஜனாதிபதி பேச்சு!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியில் நடந்த இந்தி மொழி சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இந்தி அறிஞர்களுக்கு அவர் விருது வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-சாதாரண மக்கள் பலனடையும் வகையில், அரசு நிர்வாக பயன்பாட்டில் உள்ள இந்தி மொழி வார்த்தைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். நாட்டின் அலுவல் மொழியான இந்தியை பரப்புவதில், ஒவ்வொருவரும் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள 21 அரசு அலுவல் மொழிகளில், இந்தி சிறப்பான இடத்தை வகிக்கிறது. நோபல் விருது பெற்ற ரவீந்திரநாத் தாகூர், இந்திய மொழிகள் நதிகள் என்றால், இந்தி மொழி கடல் என்று கருத்து தெரிவித்தார். மத்திய மந்திரிகள் மற்றும் மத்திய அரசு துறைகள் சார்பில், இந்தி மொழி இணையதளம் தொடங்கப்பட வேண்டும்.இதன் மூலம் அரசு திட்டங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டு சாதாரண மக்களை சென்றடைய வேண்டும். இந்தி மொழியையும் கலாசாரத்தையும் பிரபலப்படுத்த வேண்டும். ஜனநாயகம் தழைத்தோங்க இந்தி மற்றும் பிராந்திய மொழிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.

இணையதளம் மற்றும் செல்போன்களில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகப்படுத்துவதன் மூலம், அரசின் திட்டங்களை எளிதில் பொதுமக்களுக்கு கொண்டு செல்ல முடியும்.இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி