ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் தமிழ் அமைப்பு தலைவர்களை சந்தித்தனர். ராஜபக்சேவுடன் பட நிறுவனத்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து சீமான் உள்ளிட்ட பலர் ‘கத்தி’ படத்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் ‘கத்தி’ பட சர்ச்சை குறித்து ‘லைக்கா’ பட நிறுவன அதிபர் சுபாஷ்கான் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
கத்தி படத்தில் தமிழ் விரோத காட்சிகள் எதுவும் இல்லை. ராஜபக்சேவுக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எவ்வித தொழில் தொடர்பும் கிடையாது. நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறினேன்.ஐரோப்பிய நாடுகளில் கடந்த 27 வருடமாக தொழில் செய்து வருகிறேன். என் உறவினர்கள் பலர் இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு உள்ளனர். எனவே ‘கத்தி’ பட தயாரிப்பாளரான எனக்கும் ராஜபக்சேக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி