அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகள் பிரிவில் பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:-நியமனம் என்பது விரிவான விஷயம். ஆனால், மத்திய அரசு அதற்கு குறுகிய விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம், கடந்த 1995-ம் ஆண்டே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது.
ஆனால், 19 ஆண்டுகள் ஆகியும், மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவர்கள் அந்த பலனையே பெறவில்லை. சட்டத்தை நிறைவேற்றியதற்கான நோக்கத்தையே மத்திய அரசு முறியடித்து விட்டது.எனவே, ஐ.ஏ.எஸ். பணிகளுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வு உள்பட அனைத்து பிரிவு அரசு பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மத்திய அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி