செய்திகள்,திரையுலகம் சூப்பர் ஸ்டாரின் சேலஞ்ச்சை ஏற்ற நடிகர் விஜய்!…

சூப்பர் ஸ்டாரின் சேலஞ்ச்சை ஏற்ற நடிகர் விஜய்!…

சூப்பர் ஸ்டாரின் சேலஞ்ச்சை ஏற்ற நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து ‘மை ட்ரீ சேலஞ்ச்’ என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கியுள்ளார். உலகம் வெப்பமயமாகலை தடுப்பதற்காகவும் மரம் வளர்த்து பூமியை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் இதை செயல்படுத்துவதாக அறிவித்திருக்கிறார். மேலும் இந்த சேலஞ்சை விஜய், சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் ஏற்கும்படியும் அவர் சவால் விட்டிருந்தார்.

தற்போது கத்தி படத்தால் பெரும் பிரச்னையில் சிக்கி தவிக்கும் விஜய் இந்த சவாலை ஏற்பாரா, என்ற சிந்தனையில் இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய். மம்முட்டியின் சவாலை ஏற்று ஒரு மரக்கன்றை நட்டு வைத்து அதை புகைப்படம் எடுத்து தனது வலைப்பக்கத்தில் போட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி