செய்திகள் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 64 வயது பாதிரியார் கைது!…

9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 64 வயது பாதிரியார் கைது!…

9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 64 வயது பாதிரியார் கைது!… post thumbnail image
திருவனந்தபுரம்:-கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிருஸ்துவ தேவாலயத்தில் கடந்த ஜூலை மாதம் பூப்பறிக்கச் சென்ற 9 வயது சிறுமியை அங்குள்ள தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற பாதிரியார் அவளை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியுள்ளார். இது தொடர்பாக வெளியே யாரிடமாவது சொன்னால் உன்னைக் கொன்று விடுவேன் என்று அவளை மிரட்டியதுடன், தொடர்ந்து அவளை தனது குடியிருப்புக்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்தும் வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி உற்சாகமிழந்து, பீதியடைந்தவளாய் காணப்படுவதை அறிந்த அவள் படிக்கும் பள்ளியின் நிர்வாகிகள், அவளை சமீபத்தில் மனநல ஆலோசனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு உளவியல் நிபுணர்கள் சிறுமியிடம் தகுந்த முறையில் விசாரித்தபோது மேற்கண்ட விபரங்கள் எல்லாம் தெரியவந்தது. இதனையடுத்து, அவளது வாக்குமூலத்தை பதிவு செய்த மாநில குழந்தைகள் நலக் கமிட்டி அதிகாரிகள் போலீசில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிரியாரான தேவதாஸ்(64) என்பவரை கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி