புதுடெல்லி:-ரஷ்யாவை சேர்ந்த ‘ஹேக்கர்’ ஒருவர் 4.93 மில்லியன் கூகுள் கணக்குகளை ஹேக் செய்து அவற்றின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்நேம்களை ஆன்லைனில் போஸ்ட் செய்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது. உங்களுடைய ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் டிரைவ், ஹேங் அவுட், யூடியூப் போன்ற கூகுள் கணக்குகள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை அறிய https://isleaked.com/en என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் உங்கள் ஜிமெயில் ஐ.டியை கொடுங்கள்.
உங்களுக்கு ஜிமெயில் முகவரியை பதிவு செய்ய விருப்பமில்லை எனில் அதிலுள்ள கடைசி 3 எழுத்துக்களை மட்டும் விட்டுவிட்டு பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்த பெயரிலுள்ள அனைத்து இமெயில் கணக்குகளையும் இந்த இணையதளம் பட்டியலிடும். அவற்றில் உங்கள் இமெயில் முகவரி இருந்தால் உங்கள் அக்கௌண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என அர்த்தம். அப்படி இருந்தால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள்.உங்கள் பாஸ்வேர்டே ஹேக் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக செட்டிங்கஸ்-ல் சென்று செக்யூரிட்டி கேள்வியை மாற்றம் செய்து விடுங்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி