சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தில் ‘செல்பிபுள்ள’ என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் அமைந்துள்ள இப்பாடலை விஜய்யுடன் இணைந்து சுனிதி சவுகான் என்ற பாடகியும் பாடியுள்ளார். இவர் ஏற்கெனவே கில்லி படத்தில் ‘ஷாலாலா’, நண்பன் படத்தில் ‘இருக்கானா இல்லை’ ஜில்லா படத்தில் ‘ஆமாங்கோ’ (ஜிங்குனமணி) ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.
தற்போது கத்தி படத்திற்காக விஜய்யுடன் இணைந்து இந்த பாடலையும் பாடியுள்ளார். இப்பாடல் ரொமான்டிக் மற்றும் குத்து பாடலாக அமைந்துள்ளது.‘கத்தி’ படத்திற்காக அனிருத் 5 பாடல்களுக்கு மெட்டமைத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி