திஹக்:-நெதர்லாந்து நாட்டில் உள்ள திஹக்கில் ஆக்கி விளையாட்டு கிளப் ஒன்று உள்ளது. இதில் பயிற்சியாளராக லூயிகி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள பயிற்சி மையத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்கள் மற்றும் மாணவிகள் உடை மாற்றுவதை படம் எடுத்து உள்ளார்.
பல பெண்கள் நிர்வாணமாக நிற்கும் காட்சிகளையும் படம் பிடித்துள்ளார். 2006ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரை இவர் இவ்வாறு படம் பிடித்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் படம் அவரிடம் இருந்தது.
இந்த கிளப்பின் நெதர்லாந்து நாட்டு இளவரசிகள் 3 பேர் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்று இருந்தனர். ஆனால் அவர்கள் உடை மாற்றுவதை இவர் படம் பிடித்ததாக தெரியவில்லை. நிர்வாண படம் எடுத்ததற்காக லுயிகி கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் சிறந்த பயிற்சியாளருக்கான அரசு விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி