செய்திகள்,திரையுலகம் அமரகாவியம் (2014) திரை விமர்சனம்…

அமரகாவியம் (2014) திரை விமர்சனம்…

அமரகாவியம் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் நாயகன் ஜீவா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நண்பராக பாலாஜியும் நாயகியான கார்த்திகாவும் அதே வகுப்பில் படித்து வருகிறார்கள். பாலாஜி கார்த்திகாவை ஒரு தலையாக காதலிக்கிறார். அவளிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார். காரணம், பாலாஜியின் தந்தையும் கார்த்திகாவின் தந்தையும் நண்பர்கள். தன் காதலை கார்த்திகாவிடம் சொன்னால் தன் தந்தைக்கு தெரிந்து விடும் என்ற பயத்தால் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

இதனால் தன் காதலை கார்த்திகாவிடம் சொல்ல ஜீவாவை தூது அனுப்புகிறார். ஜீவாவும் பாலாஜியின் காதலை கார்த்திகாவிடம் சொல்கிறார். ஆனால் கார்த்திகாவோ நான் பாலாஜியை காதலிக்கவில்லை. உன்னைதான் காதலிக்கிறேன் என்று ஜீவாவிடம் சொல்கிறார். மேலும் நாளை இதே நேரத்தில் இதே இடத்தில் சந்திக்கும் போது உன் பதிலை கூறுமாறு சொல்கிறாள் கார்த்திகா. இதனை கேட்டு அதிர்ச்சியடையும் ஜீவா, வீட்டிற்கு சென்று சிந்தித்து மறுநாள் தன் காதலை சொல்கிறார். அதன் பின் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.ஜீவாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று நண்பர் என்று பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார் கார்த்திகா. அதேபோல் ஜீவாவும் கார்த்திகாவை தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இருவரும் ஒருநாள் தனிமையான இடத்தில் நெருக்கமாக இருக்கும்போது போலீஸ் இவர்களை பார்த்து கண்டித்து பெற்றோர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும்படி சொல்கிறார். அதன்படி இருவரின் பெற்றோர்களும் போலீஸ் ஸ்டேனுக்கு வருகிறார்கள்.

அங்கு போலீசார், இருவரும் காதலிப்பதாகவும் நெருக்கமாக இருந்ததாகவும் பெற்றோர்களிடம் கூறுகிறார்கள். இதனால் பெற்றோர்கள் அவமானப்படுகிறார்கள். இரு குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் பெற்றோர்கள் ஜீவாவையும், கார்த்திகாவை பிரிக்க முயற்சி செய்கிறார்கள்.
ஒருநாள் கார்த்திகாவை சந்திப்பதற்கு வீட்டிற்கு செல்கிறார் ஜீவா. அங்கு கார்த்திகாவின் தந்தை வாகனத்தை எரித்து விடுகிறார் ஜீவா. வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்க்கும் இடைவேளையில் நாயகியிடம் பேசுகிறார் ஜீவா. அப்போது கார்த்திகாவின் தாய் அவர்கள் பேசுவதை பார்த்துவிடுகிறார். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஜீவாவை கைது செய்து விடுகிறார்கள். போலீஸ் விசாரணையில் இவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள்.இதற்கிடையில் கார்த்திகாவின் பெற்றோர்கள் வீட்டை காலி செய்து விட்டு செல்கிறார்கள். கார்த்திகா, ஜீவாவின் நண்பனான பாலாஜியிடம் தாங்கள் இடம் மாறும் இடத்தின் முகவரியை கொடுத்துவிட்டு செல்கிறார். ஆனால் பாலாஜி அந்த கடித்தத்தை சிகிச்சைக்குப் பிறகு வரும் ஜீவாவிற்கு தெரியாமல் மறைத்து விடுகிறார்.

பிறகு ஜீவா, கார்த்திகாவை தேடி பழைய வீட்டிற்கு செல்கிறார். அங்கு இல்லாததால் அவளை தேடி அலைகிறான். இறுதியில் ஜீவா, கார்த்திகாவை கண்டுபிடித்து கரம் பிடித்தாரா? ஜீவாவை போலீசார் அழைத்துச் செல்ல காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் பொருந்திருக்கிறார் சத்யா. தன் கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் இவரை சுற்றியே இருப்பதால் நடிப்பதற்கான அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.கார்த்திகா கதாபாத்திரத்தில் மியா நடித்திருக்கிறார். தமிழில் முதல் படத்திலேயே வலுவான கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்திருக்கிறார். இவருடைய நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. மேலும் நண்பனாக வரும் பாலாஜி, ஆனந்த் நாக், அருள் ஜோதி, தம்பி ராமையா, எலிசபெத், வைத்திய நாதன், ரிந்து ரவி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜீவா சங்கர். 1989-களில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் பொறுமையாகவே செல்கிறது. விறுவிறுப்பான காட்சிகள் அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். நீண்ட காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘அமர காவியம்’ காதல்………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி