சென்னை:-தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் முதன்முறையாக பவர் என்ற படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார்.முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக திரிஷா அறிமுகமான இப்படம் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.
275 திரையரங்குகளுக்கும் மேல் வெளியான ‘பவர்’ படம் மூன்று நாட்களுக்குள்ளாகவே சுமார் 7 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.80 வருட கன்னட சினிமா வரலாற்றில் மிகப் பெரிய ஓபனிங் கிடைத்த படம் என்ற சாதனையை ‘பவர்’ திரைப்படம் புரிந்திருக்கிறதாம்.
முதலிரண்டு நாள் வசூலை விட மூன்றாம் நாள் வசூல்தான் அதிகமாக இருந்ததாம். இதுவும் ஒரு சாதனை என்கிறார்கள்.ஒரு நாளைக்கு 1060 காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் திரையிடப்படுகிறதாம். இந்த படத்தின் வெற்றி மூலம் திரிஷாவிற்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி