காம வெறியனும், செச்சன்யா மீது போர் தொடுத்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று தனது வெறியாட்டத்தை காண்பித்தவருமான லசாரின் கொடூரங்கள் பற்றி தெரிந்து வைத்துள்ள அப்பெண்ணை ரஷ்ய அதிபரிடம் இருந்து காப்பாற்ற நினைக்கையில் அவளை சர்வதேச அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்படும் கும்பல் கடத்துகிறது.இதற்கு என்ன காரணம் என்பது பிராஸ்னனுக்கு தெரிய வருகிறது. சி.ஐ.ஏ.வில் உள்ள கறுப்பு ஆடுகள் உதவியால் தான் அவள் கடத்தப்பட்டாள் என்பது தெரிகிறது. அவளை கடத்தியது யார் என்றும், அவள் எங்கிருக்கிறாள் என்பதும் சமூக ஆர்வலரான ஒல்கா குரிலெங்கோவுக்கு தான் தெரியும்.அப்பெண் இருக்குமிடத்தை பிராஸ்னனிடம் ஒல்கா தெரிவித்தாளா? கொடூர அதிபரான லசாரின் நடவடிக்கைகள் உலக மக்களுக்கு தெரிந்ததா? என்பதே மீதி கதை.இப்படத்தில் கதாநாயனாக நடித்துள்ள பிராஸ்னன் ஆக்ரோஷ காட்சிகளில் சீறிப் பாய்ந்திருக்கிறார். அவருக்கும் வில்லன் லுக் ப்ரேசியாவிற்கும் நடைபெறும் சண்டை காட்சி விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
ரஷ்ய அதிபராக நடித்துள்ள லசாரின் நடிப்பு அற்புதம். ரஷ்ய அதிபரின் வேலையாளாக உள்ள சி.ஐ.ஏ.ஏஜென்டாக வரும் மெடிஹா முஸ்லியோவும் நன்றாக நடித்துள்ளார்.இப்படத்தில் வன்முறை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக குழந்தையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அக்குழந்தையின் நெஞ்சில் குண்டு பாயும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது. ஒரு சில காட்சிகளில் ஆடைகளே இல்லாமல் பின்னணியில் நிர்வாணமாக பெண்கள் நடந்து போவது தெரிகிறது.
பில் க்ராங்கிரின் தேர் ஆர் நோ ஸ்பைஸ் என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனரான ரோஜர் டொனால்ட்சன்னின் திறமை பல்வேறு இடங்கிளில் பளிச்சிடுகிறது. இசையமைப்பாளர் மார்கோ பெல்ட்ராமியின் இடத்திற்கு தகுந்தாற்போல் இசை அமைத்துள்ளார்.
மொத்தத்தில் ‘தி நவம்பர் மேன்’ அதிரடி………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி