சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கத்தி‘. அனிருத் இசையில் பாடல்கள் செப்டம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.’கத்தி’ படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் சில தகவல்களைக் கூறி இருக்கிறார்.
படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டன. விஜய், சமந்தாவின் இரண்டு பாடல்கள் மட்டுமே எடுக்கப்படவேண்டியுள்ளது. இதற்காக விரைவில் ஐரோப்பா செல்லவிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். தீபாவளிக்கு படம் வெளியாகும் எனவும் செப்டம்பர் 18ம் தேதி வெளியாகும் இசைக்காக அனிருத் சில மேற்பார்வை வேலைகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி