மும்பை:-பிரபல இந்தி இயக்குனர் சுதிர் மிஷ்ரா இயக்கும் அவுர் தேவதாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் நடிகை காஜல் அகர்வால். ஷெட்யூல்படி இந்த மாதம் லக்னோவில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான தேதியை காஜல் ஒதுக்கிக் கொடுக்காததால் படப்பிடிப்பை தொடரமுடியாமல் போனது. அதனால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
காஜல் தற்போது ராம்சரணுடன் கோவிந்தடு அன்டாரி வீடேலே என் படத்திலும், பூரி ஜெகந்தாத் இயக்கும் படத்திலும், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்திலும் நடித்து வருவதால் அவரால் அவுர் தேவதாஸ் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. ஒரு மாதம் காத்திருக்க சொன்னார். ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் நீக்கப்பட்டிருக்கிறார் என்று பட வட்டாராங்கள் தெரிவிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி