நியூயார்க்:-அமெரிக்காவில் நடைபெற்றும் வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் சானியா-சோரஸ் ஜோடி 7-5, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப் போட்டியில் யங்சான்-ஹட்சின்ஸ் ஜோடியை எதிர்கொண்ட சானியா-சோரஸ் ஜோடி முதல் செட்டை 7-5 என்ற செட் கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது சுற்றில் யங்சான்-ஹட்சின்ஸ் ஜோடி அபாரமாக விளையாடி 4-6 என்ற செட் கணக்கில் கைப்பற்றியது. எனினும் 3வது சுற்றில் சுதாரித்து விளையாடிய சானியா-சோரஸ் ஜோடி 10-7 என்ற செட் கணக்கில் கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி