சென்னை:-ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பு எட்டியுள்ள நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து உள்ளார்.இப்படத்தின் டீசர் சமீபத்தில் முக்கியமான பத்திரிகையாளர்களுக்கு மட்டும் ரவிச்சந்திரன் போட்டு காட்டினார். டீசர் பார்த்த எல்லோரும் ஆஹா ஓஹா என்று பாராட்டி தள்ள மக்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பு கூடியது.
இந்நிலையில் ஐ டீசர் போட்டு காண்பித்த இடத்தில் அப்படியே கேமரா மூலம் பதிவு செய்த யாரோ ஒருவர் அதை இன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.இதனால் பலத்த அதிர்ச்சியில் உள்ளார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி