செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மனித குலத்தை அழிக்க போகும் விண்கல்: பேராசிரியர் காக்ஸ் எச்சரிக்கை!…

மனித குலத்தை அழிக்க போகும் விண்கல்: பேராசிரியர் காக்ஸ் எச்சரிக்கை!…

மனித குலத்தை அழிக்க போகும் விண்கல்: பேராசிரியர் காக்ஸ் எச்சரிக்கை!… post thumbnail image
இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் பேராசிரியர் பிரையன் காக்ஸ். இவர், விண்கற்களால் மனித இனம் அழிந்து போகும் அபாயம் உள்ளது. இந்த அச்சுறுத்தலை நாம் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.விண்கல் மோதல் எப்பொழுது நடைபெறும் என்பது ஒருவருக்கும் உண்மையில் தெரியாது. அது நாளையும் நடக்கலாம். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே நமது கவலையாக உள்ளது. அதற்கு ஒரு நிகழ்ச்சியாக, அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த வருட தொடக்கத்தில் சிறப்பான திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பூமியை நெருங்கும் விண்கல்லை அணு ஆயுதங்கள் கொண்டு வெடிக்க செய்வதே அந்த திட்டமாகும்.

எனினும் இது போன்ற திட்டங்கள் வேகமாக நடைபெறுவதற்கு ஏற்றதல்ல. இது மனிதர்களின் முட்டாள்தனம் என நான் கருதுகிறேன். இது குறித்து நாம் கவலைப்பட வேண்டும். சில நூற்றாண்டுகள் கடந்த நிலையில், நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளோம். விண்கல் குறித்து மட்டும் நாம் கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. பருவ மாற்றம் மற்றும் மனிதர்களுக்கு மாற்றாக உள்ள கருவிகள் ஆகியவையும் முக்கிய விசயங்களாகும்.இதனை சமாளிப்பதற்கு நாம் ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றில் அதிக அளவில் பணத்தை செலவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டென்னஸ்சி பல்கலை கழகத்தின் ஆய்வாளர்கள் வருகிற 2880ம் ஆண்டில் பூமியை விண்கல் ஒன்று தாக்கும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விண்கல் வினாடிக்கு 9 மைல்கள் வேகத்தில் பூமிக்கு மிக அருகில் சுற்றி கொண்டு இருக்கிறது என்றும் அது அட்லாண்டிக் சமுத்திர பகுதிக்குள் மணிக்கு 38 ஆயிரம் மைல்கள் வேகத்தில் மோதி விழும் ஆபத்து உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி