சென்னை:-ஐ, சுட்டம் பழம் சுடாத பழம், நாலு பொண்ணு நாலு பசங்க என சில படங்கள் மூலம் மீண்டும் எழுந்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சீனிவாசன். மேலும் வழக்கம் போலவே தான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு கூட்டத்தையே திரட்டிக்கொண்டு திரியும் அவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திருமணமான நிகழ்ச்சி தொகுப்பாளினி கல்யாணி கேட்ட கேள்விகளுக்கு எக்குதப்பாக பதில் கொடுத்தார். அதாவது அவரிடம் முத்தம் கேட்டதோடு நில்லாமல், நாம ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று பதில் கொடுத்து தொகுப்பாளினியை நடுநடுங்க வைத்தார்.
அதோடு, என்னோட ரசிகர்கள் உருவாக்கப்பட்டவர்களாக சொல்கிறார்கள் அது உண்மையில்லை. எனது ரசிகர்கள் தானாக உருவானவர்கள். எனக்கு ஒன்னுன்னா தீக்குளிக்கக்கூட தயங்கமாட்டார்கள். அந்த அளவுக்கு எனது ரசிகர்கள் வெறித்தனமானவர்கள் என்றும் சொல்லி, டிவி நேயர்கள் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்தார் சீனிவாசன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி