1911ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் போக்ஸ்பர்க்கில் பிறந்த கோர்டான், 1938ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 1939ல் டர்பனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கோர்டான் விளையாடினார். 10 நாட்கள் நடைபெற அந்த போட்டியில் முடிவு தெரியவில்லை. 42 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி நாடு திரும்ப வேண்டியிருந்ததால் போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர். இப்போட்டியில் கோர்டான் 92.2 ஓவர்கள் பந்து வீசி 256 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோர்டான் 20 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இரண்டாவது உலகப்போரினால் இவரது சர்வதேச போட்டிக்கு தடங்கல் ஏற்பட்டது. ஆனால், போருக்குப் பிறகு முதல்தர போட்டிகளில் விளையாடினார்.அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் முழு வாழ்க்கை வாழ்ந்த மனிதர் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் அலி பச்சார் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி