சென்னை:-கத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டன. பேட்ச் ஒர்க் என்கிற சில ஷாட்கள் மட்டுமே பாக்கி உள்ளன. அதோடு, அனிருத் தாமதப்படுத்தியதால் எடுக்காமல் தடைபோட்டுப்போன விஜய் கடைசியாகப் பாடிய பாடல் காட்சி மட்டுமே இன்னும் எடுக்கப்பட உள்ளன. இன்னொரு பக்கம், கத்தி படத்திற்கான எடிட்டிங், டப்பிங் வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கத்தி படத்தைப் பற்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கத்தி படத்தின் முதல் பகுதி வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. தற்போது இரண்டாம் பகுதிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர். முருதாஸின் இந்த அறிவிப்பின் மூலம் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவே தோன்றுகிறது. ஷங்கர் இயக்கும் ஐ படத்துடன் மோத முடிவு செய்துவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி