சென்னை:-2012ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த படம் இஷ்க். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய மாஜி ஹீரோயின் ஜெயப்ரதா அதனை தமிழில் ‘உயிரே உயிரே’ என்ற பெயரில் தயாரித்தார். விஷால் நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கினார். சித்து என்ற புதுமுகத்துக்கு ஜோடியாக முதலில் நித்யாமேனன் நடிப்பதாக இருந்தது பின்னர் ஹன்சிகா நடித்தார்.
கோவாவில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. பாதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தை என்ன காரணத்தாலோ கிடப்பில் போட்டுவிட்டார்கள்.இப்போது படத்தை தூசி தட்டி எடுத்து மீண்டும் படிப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள். இதற்காக ஹன்சிகாவிடம் தேதி கேட்டிருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி