சென்னை:-ஒரு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கபட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்சு உலகம் முழுவதும் பரவியது. அதை காபி அடித்து பல பக்கெட் சேலஞ்சுகள் வந்தன.அவை அனைத்தும் அவ்வளவாக வரவேற்பை பெறாத நிலையில், மலையாள சுப்பர்ஸ்டார் மம்மூட்டி இப்போது ஒரு புதிய சேலஞ்சு ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு அவர் ‘மை ட்ரீ சேலஞ்சு’ என பெயரிட்டுள்ளார்.
போட்டியின்படி அவர் ஒரு மரகன்றை நட்டு, அதை அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பாலிவுட் நடிகர் சாருக்கான், மற்றும் இளையதளபதி விஜய், சூர்யா ஆகியோரையும் இப்போட்டியில் கலந்துகொள்ள நாமினேட் செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி