செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் வாட்ஸ் ஆப்பில் இலவசமாக போன் பேசும் வசதி விரைவில் அறிமுகம்!..

வாட்ஸ் ஆப்பில் இலவசமாக போன் பேசும் வசதி விரைவில் அறிமுகம்!..

வாட்ஸ் ஆப்பில் இலவசமாக போன் பேசும் வசதி விரைவில் அறிமுகம்!.. post thumbnail image
நியூயார்க்:-மொபைல் மெசேஜிங் சேவையை அளித்து வரும் வாட்ஸ் ஆப்பில் விரைவில் இலவசமாக போன் பேசும் வசதி வரவுள்ளது. தற்போது வாட்ஸ் ஆப்பில் 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். சமீபத்தில் அதன் இண்டர்பேசில் செய்யப்பட்டுள்ள மாற்றம் விரைவில் வாய்ஸ் காலிங் வரவுள்ளதை மறைமுகமாக தெரிவி்க்கிறது.

விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வாட்ஸ் ஆப்பில் மொழிபெயர்ப்பு வசதியும் கூடவே வரவிருக்கிறதாம். இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தி பியூஸ் ஜாப்லின்.காம் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி