செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!…

மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!…

மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!… post thumbnail image
சென்னை:-ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், வினாடிக்கு 24.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

‘ஐ.எஸ்.டி.என்.’ என்று சொல்லப்படுகிற இந்திய விண்வெளி நெட்வொர்க்கைப் பயன்படுத்தி இந்த விண்கலத்தின் பயணத்தை ‘இஸ்ரோ’ கண்காணித்து வருகிறது. வரும் செப்டம்பர் 24 அன்று மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தை 300 நாட்கள் நிறைவு செய்து உள்ளது. இன்னும் 23 நாட்களில் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை சென்றடையும். விண்கலம் நல்ல நிலையில் உள்ளது.இது குறித்து இஸ்ரோ இணையதளத்தில் விண்கலம் பூமியில் இருந்து 1990 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.விண்கலம் நல்ல நிலையில் உள்ளது. தற்போது விண்கலம் வினாடிக்கு 22.33 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.என கூறபட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி