சென்னை:-தற்போது நட்சத்திரங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள சமூக வலைத்தளங்கள் காரணமாக அமைந்துவிட்டன. அதிலும் தங்கள் நட்சத்திரங்களை எங்காவது பார்த்தால் அவர்களுடன் எப்படியாவது புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் ஏற்றி அதிகமான ‘லைக்’ வாங்க வேண்டும் என்ற ஆவல் சராசரி ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. பல நடிக, நடிகையரும் ரசிகர்களின் புகைப்படம் எடுக்கும் ஆவலை தடுப்பதில்லை.
ஆனால், நடிகை டாப்ஸீக்கு ரசிகர்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் அனுமதி பெற்றுத்தான் எடுக்க வேண்டும் என்கிறார். சில ரசிகர்கள்தான் மிகவும் மரியாதையாக அனுமதி பெற்று புகைப்படம் எடுக்கிறார்கள். அதே போல் என்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் தவறான, ஆபாசமான டுவிட்டர்களைப் பதிவிடுபவர்களை தடை செய்துவிடுவேன். மேலும், என்னுடன் புகைப்படம் எடுக்கும் போது என் தோள் மீது கை போடுபவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. அது போன்று செய்பவர்களைக் கண்டால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி