சென்னை:-விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தல 55 படத்தின் முதல் பார்வை வெளிவரும் என்று படக்குழு அறிவித்தார்கள்.ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை, ஏன் வரவில்லை என்று விசாரித்த போது ஏ. ஏம் ரத்னம் ஒரு செண்டிமெண்ட் பிரியர் என்றும் அவருடைய ஆசை படி படத்தின் முதல் பார்வை வியாழக்கிழமை அன்று தான் வெளியாக வேண்டும் என்றும் ஏ. ஏம் ரத்னம் அடம் பிடிக்க அதனால் ஒரு நல்ல தேதியை தேடி வருகிறதாம் தயாரிப்பு நிறுவனம், இருந்தாலும் அஜித் யங் லுக் புகைப்படங்கள் வெளிவந்து படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் அஜித்தின் கதாபாத்திரம் என்ன என்று பல பேர் யோசிக்கும் வகையில் கதாபாத்திரம் வடிவமைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.அதாவது இப்படத்தில் அஜித் போலீஸாக நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்தாலும், அஜித் கேரக்டர் என்ன என்பது படம் ஆரம்பித்து 45 நிமிடங்கள் வரை ரசிகர்களுக்கு தெரியவே செய்யாதாம்.ஜேம்ஸ்பான்ட் படங்களைப் போல, இப்படத்தில் அஜித் செய்திருக்கும் கேரக்டரை மையமாக வைத்தே தொடர்ந்து சில படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் கௌதம் மேனன். அஜித் விரும்பினால் அந்த எல்லா படங்களிலும் அவரே நாயகனாகத் தொடர்வாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி