அதில் அவர் கையில் பாரதிய ஜனதா கொடியை வைத்துக் கொண்டு இது பிஜேபி என்கிறார். அடுத்து அந்த ஃபோட்டோவைத் திருப்புகிறார். அதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஜினிகாந்த் இருக்கும் போட்டோ இருக்கிறது. எனக்கு ரஜினிகாந்தைப் பிடிக்கும். மோடி சாரும், ரஜினி சாரும் நெருங்கிய நண்பர்கள். நான் ஜப்பான் ரஜினி ஃபேன் கிளப் உறுப்பினர். எனக்குத் தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். அவரைத் தலைவர்னு சொல்வாங்க. எனக்கு முத்து, பாஷா படங்கள் ரொம்ப பிடிக்கும். பாஷா ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி என அந்த டயலாக்கையும் பேசிக் காட்டுகிறார்.
சமூக வலைத்தளங்களில் இந்த ஜப்பான் ரசிகர் யசுதா பேசும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஜினிகாந்த், ஜப்பான் நாட்டிலும் தொடர்ந்து ரசிக்கப்பட்டு வருவது ஆச்சரியமான ஒன்று. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். ஆனால், இங்கோ ஒரு சிலர் தேவையில்லாமல் அந்தப் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார்கள் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி