சென்னை:-சினிமா உலகைப்பொறுத்தவரை எந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாலும், ஓய்வாக இருக்கும் நடிகர்-நடிகைகள் சீட்டு விளையாடிதான் பொழுதை கழிப்பார்கள். அவர்கள் சும்மா ஜாலிக்காக மட்டுமே ஆடுவதில்லை. பணம் வைத்து ஆடுவார்கள். அதனால் விளையாட்டில் கைதேர்ந்தவர்கள் தினமும் சீட்டு விளையாடி ஜெயித்து ஒரு தொகையை வீட்டிற்கு எடுத்துச்செல்வார்கள். அப்படி அரண்மனை படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராய்லட்சுமி, ஒரு பெரிய தொகையை சம்பாதித்து விட்டாராம்.
அதனால் படப்பிடிப்பு 3 மாதம் நடந்து முடியும் நேரத்தில் ஒரு கார் வாங்கும் அளவுக்கு சம்பாதித்து, காரும் வாங்கி விட்டாராம், ராய்லட்சுமி. இந்த தகவலை அப்படத்தின் ஆடியோ விழாவின்போது தெரிவித்த நடிகர் ஒருவர், இந்த படத்தில் நடித்த எங்கள் பலபேரின் பணம் இப்போது ராய்லட்சுமியிடம்தான் உள்ளது என்றார்.
மேலும், இந்த படத்தில் சீட்டு விளையாடி கார் வாங்கி விட்ட ராய்லட்சுமிக்கு, அடுத்த படத்தில் விளையாடி வீடு வாங்க வேண்டும் என்ற நோக்கமும் உள்ளதாம். இதை அந்த நடிகர் சொன்னபோது எந்த மறுப்பும் சொல்லாமல் அதை உண்மை என்பது போலவே சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தார் ராய் லட்சுமி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி