சென்னை:-நார்த் சவுத் பாலிவுட் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் எம்.செபாஸ்டியன் என்பவர் ‘மற்றொருவன்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் ரியாஸ்கான் மட்டுமே நடித்துள்ளார். படத்தில் வேறு கதாபாத்திரங்கள் கிடையாது. மஜோ மாத்யூ இயக்கி உள்ளார். சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பென்னி ஜான்சன் இசை அமைத்துள்ளார். தமிழ், மலையாள மொழிகளில் தயாராகி உள்ளது.
மனதளவில் மெஸ்மரிசம் செய்யப்பட்ட ரியாஸ்கான் மனம்போன போக்கில் நடந்து ஒரு காட்டுக்குள் வந்து சேர்கிறார். வந்த பிறகுதான் தெரிகிறது, தன்னை அழைத்து வந்தது ஒரு நிழல் என்று. உருவம் இல்லாத அந்த நிழல் அவரை ஏன் காட்டுக்குள் அழைத்துச் சென்றது. அதன் நோக்கம் என்ன? அதனிடமிருந்து ரியாஸ்கான் தப்பித்தாரா எனபது படத்தின் ஸ்ரீன்ப்ளே. தனி ஆளாக நடித்திருப்பதுடன். பயங்கரமான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம். கேரளா, குமுளி பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கி உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி