குறிப்பிட்ட தினத்தில் தல 55 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாததினால், அஜித் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள்.அதிகாரபூர்வமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை என்றாலும், அஜித் நடிக்கும் புதிய படத்தின் சில புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிவிட்டன. அதில் படு ஸ்டைலாக காட்சியளிக்கும் அஜித்தின் தோற்றம் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.
லேட்டஸ்ட் தகவலின்படி அஜித் படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரையும் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த வீரம் படம் ரிலீசானது.அதேப்போல வருகிற பொங்கலுக்கு அஜித் நடித்து வரும் புதிய படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி