சென்னை:-தெலுங்கில், சாக் ஷி என்ற படம் மூலம் இயக்குனரான பாபு, சம்பூர்ண ராமாயணம், ஸ்ரீராமாஞ்சநேயா யுத்தம், சீதா கல்யாணம், உட்பட, தெலுங்கில், 51 படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக, ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தை இயக்கினார். அதில், என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்துள்ளனர்.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்த பாபு, சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு வீட்டிலிருந்தபடியே சிகிச்சையை தொடர்ந்தார்.நேற்று முன்தினம், மூச்சு திணறல் ஏற்பட்டதால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று மாலை, மாரடைப்பால் இறந்தார். பாபுவின் மரண செய்தி அறிந்த தெலுங்கு பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பாபு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி