தமிழ், தெலுங்கு ரசிகர்களை தனது அழகான உருவத்தாலும், நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த த்ரிஷா, கன்னட ரசிகர்களையும் கவர்ந்துவிட்டாராம். புனித் ராஜ்குமாருடன் பொருத்தமான ஜோடியாக இருக்கிறார் என கன்னட ரசிகர்கள் கொண்டாடுகிறார்களாம். சுமார் 275 திரையரங்குகளில் வெளியான ‘பவர்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் சுமார் 1.5 கோடியும், இரண்டாவது நாளில் 1.7 கோடி ரூபாயும் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாக சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் இந்த வார முடிவில் மட்டும் சுமார் 6 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூல் செய்துவிடும் என்றும் சொல்கிறார்கள். இது கன்னடத் திரையுலகைப் பொறுத்தவரை மிகப் பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. தான் கன்னடத்தில் அறிமுகமான படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது பற்றி த்ரிஷா மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவருடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி