செய்திகள்,திரையுலகம் நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!…

நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!…

நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-விநாயகர் சதுர்த்தியன்று நடிகர் தனுஷ் அவருடைய தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்க ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அப்படத்தின் அறிவிப்பைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தவர் சிவகார்த்திகேயன்தான் என்கிறார்கள். தனுஷ் என்ன செய்தாலும் அதைப் பாராட்டி, வாழ்த்தி தன்னுடைய டுவிட்டரில் செய்தி வெளியிடும் சிவகார்த்திகேயன் இதுவரை ‘நானும் ரவுடிதான்’ படத்தை வாழ்த்தி எந்த செய்தியையும் வெளியிடாததை அவர்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

அன்றைய தினம் ரஜினியின் ‘லிங்கா’ முதல் பார்வைக்கெல்லாம் வாழ்த்துகளைப் பதிவிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும், சிவகார்த்திகேயனுக்கு நீண்ட நாட்களாகவே நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையாம். ‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள தனுஷ், சிவகார்த்திகேயனை முழுமையாக ஓரம் கட்ட முடிவு செய்துவிட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி