டென்வர்:-அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் பைப்பர் பி.ஏ.-46 என்ற விமானம் எரீ முனிசிபல் விமான நிலையத்தில் காலை 11.50 மணியளவில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டின் தேசிய போக்குவரத்து குழுவின் செய்தி தொடர்பாளர் பீட்டர் க்னட்சன் தெரிவித்துள்ளார். இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். எஞ்சிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
எரீ நகர காவல்துறை ஆணையரான லீ மாத்திஸ் இவ்விபத்து குறித்து கூறுகையில், ஆறு பேர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் ரன்வேக்கு 100 யார்டு தொலைவில் விபத்துக்குள்ளானதாக கூறினார். எனினும் விமானம் புறப்பட்ட போதோ அல்லது இறங்கிய போதோ விபத்துக்குள்ளானதா என தனக்கு தெரியாது என்று அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி